தமிழ் சினிமா படங்களை இலவசமாக இன்டர்நெட்டில்  முழு தரத்துடன் பார்க்க பயன்படும் வெப்சைட் பற்றிதான் இந்த பதிவு. இணையத்தில் திருட்டுத்தனமாக படங்களை பார்ப்பதற்கு சில வெப்சைட்கள் இருந்தாலும், படத்தின் தரம் மிக மோசமானதாக இருக்கும்.

ஆனால் இந்த இணையதளத்தில் அப்படி இருக்காது. ஒரிஜினாலிட்டி கிடைக்கும். சரியான தரத்துடன் படங்களை பார்க்க முடியும்.

website for watching tamil movies

இந்த இணையத்தில் படங்களைப் பார்க்க உங்களுக்கு தடையில்லாத இன்டர்நெட் கனெக்சன் மட்டும் இருந்தால் போதும்.

ஜீரோடாலர்ஸ்மூவி.காம் என்ற இணையதளம்தான் உண்மையான முழுமையான தரத்துடன் சினிமா படங்களை பார்க்க வசதி செய்து தருகிறது.

இந்த இணையதளத்தில் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஆங்கிலம் உட்பட பல மொழிகளில் உள்ள படங்களை பார்க்க முடியும்.

வெப்சைட் அட்ரஸ்: www.zerodollarmovies.com

இந்த வெப்சைட்டில் புதிய திரைப்படங்களை பார்க்க முடியாது. ஆனால் உங்களுக்கு பிடித்த பழைய படங்களை கண்டு ரசிக்க முடியும்.

வெப்சைட்டிற்கு சென்று வலதுபுற மூலையில் மேலே Browse Catalog என்ற டிராப் டவுன் மெனுவில் சென்று வேண்டிய மொழியை முதலில் தேர்ந்தெடுக்கவும். உதாரணமாக  Tamil என்பதை தேர்ந்தெடுக்கவும்.

zerodollarmovies for watching tamil movies

உடனே அம்மொழியில் உள்ள படங்கள் அனைத்தும் வரிசைபடுத்தப்பட்டு காட்டப்படும். தேவையான படத்தை தேர்ந்தெடுத்து பார்க்கலாம்.

அல்லது Instant search என்ற சர்ச் பாக்ஸ் மூலம் படத்தின் பெயரை கொடுத்து தேடி வேண்டிய சினிமா படத்தை பார்க்க முடியும்.

படங்களைப் பார்ப்பதற்கு எவ்வித கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை. விளம்ப தொல்லையும் இருப்பதில்லை. அரிதான பழைய சினிமா படங்களை இதில் காண முடியும் என்பது இந்த இணையதளத்தின் சிறப்பு.

Tags: Useful information, Tamil Websites, Watching Movie Online, Tamil Movie online, Tamil cinema website.

By admin

One thought on “இலவசமாக தமிழ் திரைபடங்களை பார்க்க உதவும் இணையதளம்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *