இணைய உலகத்தில் பாஸ்வேர்ட் பாதுகாப்பு முக்கியமானது. இணையதள கணக்குகளில் இது முக்கிய பங்கு வகிக்கிறது. மற்றவர்கள் எளிதில் யூகிக்க முடியாத அளவுக்கு உங்களுடைய பாஸ்வேர்ட் இருத்தல் அவசியம். குறிப்பாக ஆங்கில எழுத்துகளில் Small Letter, Capital Letters மற்றும் Symbols போன்றவற்றை பாஸ்வேர்ட்டில் பயன்படுத்த வேண்டும்.
![]() |
பாஸ்வேர்ட் மீட்டர் |
அப்பொழுதுதான் அது வலிமையான பாஸ்வேர்ட்டாக இருக்கும். மற்றவர்கள் எளிதில் யூகிக்க முடியாதபடியும் இருக்கும்.
சரி, தற்பொழுது நீங்கள் வைத்திருக்கும் பாஸ்வேர்ட் எந்தளவுக்கு வலிமையானது என்பதை எப்படி அறிந்து கொள்வது? அதற்காகவே உள்ளது ஒரு அருமையான இணையத்தளம். அது உங்களுடைய பாஸ்வேர்ட் வலிமையை கணக்கிட்டு சொல்கிறது.
Password Meter என்ற அந்த இணையதளத்தில் உங்களுடைய பாஸ்வேர்டை கொடுத்து அதன் வலிமையை நீங்கள் சோதித்துக் கொள்ளலாம்.
இணையதளத்திற்கான சுட்டி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
google_ad_client = “ca-pub-2152010975483882”; google_ad_slot = “2962536853”; google_ad_width = 300; google_ad_height = 600; google_language = “en”; //pagead2.googlesyndication.com/pagead/show_ads.js ஏன் பாஸ்வேர்ட் வலிமையானதாக இருக்க வேண்டும்?
- இணையத்தில் குறிப்பாக வங்கி பண பரிவர்த்தனை, இணையவழி பொருட்கள் வாங்குதல் போன்றவற்றிக்கு வங்கி விபரங்களை அதில் பயன்படுத்த வேண்டியிருக்கும்.
- அலுவல் தொடர்பான முக்கிய கோப்புகளை மின்னஞ்சல் வழியாக அனுப்ப வேண்டியதிருக்கும்.
- சொந்த அலுவல் மற்றும் தனிப்பட்ட ரகசிய தகவல்களை பாதுகாக்க வேண்டியதிருக்கும்…
- இவற்றிற்கெல்லாம் அடிப்படையாக பாதுகாப்பாக அமைவது “Password” தான்.
அதனால் பாஸ்வேர்ட் குறித்த அலட்சியம் இருக்க கூடாது. கண்டிப்பாக அது பிறரால் யூகிக்க முடியாததாகவும், வலிமையானதாகவும் இருக்க வேண்டும். அதே சமயம் உங்களுக்கு விரைவில் நினைவுக்கு வருவதாக இலகுவாகவும் இருக்க வேண்டும். குறைந்த பட்சம் 6 எழுத்துகளாகவுத் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
உதாரணமாக உங்களுடைய பாஸ்வேர்ட் “அன்புசெல்வி” என இருந்தால், அதை இப்படி எழுதலாம். ^nBu$e1vi.
இப்படி நான் கொடுத்த பாஸ்வேர்டின் வலிமை 88% என காட்டியது. பார்க்க படம்.
இதுபோன்று நீங்கள் அமைத்திருக்கும் பாஸ்வேர்ட்டின் வலிமையை அறிந்துகொள்ள செல்ல வேண்டிய இணையதளத்திற்கன சுட்டி:
நன்றி…!
வருகைக்கும் கருத்திற்கு நன்றி.
நல்லதொரு தகவல்… நன்றி !!!
Thanks