ஆன்ட்ராய்ட் ஸ்மார்ட் போன் மூலம் தற்பொழுது நேரடியாக தமிழ் தொலைக் காட்சி அலைவரிகளை கண்டுகளிக்க முடியும். அதற்கென சில செயலிகள் உள்ளன.
அவற்றில் கட்டமில்லாமல் தரவிறக்கி, தமிழ் உட்பட பல மொழிகளில் உள்ள தொலைக்காட்சி அலைவரிசைகளை பார்க்க உதவும் செயலி தான் ஒளிதம் செயலி.
![]() |
ஆன்ட்ராய்ட் போனில் தமிழ் தொலைக்காட்சிகள் |
இச்செயலி மூலம் எந்த ஒரு தமிழ் தொலைக்காட்சி அலைவரிசையும், எங்கிருந்தாலும் கண்டுகளிக்க முடியும். குறிப்பாக அன்றாடம் ஒளிப்பரப்படும், நாடகம் உட்பட, பல்வேறு பயனுள்ள நிகழ்ச்சிகளை “ஸ்மார்ட் போன் ” மூலமாகவே பார்க்க முடியும்.
கூகிள் ப்ளே ஸ்டோரில் இச் செயலி கிடைப்பதில்லை. இது ஒரு மூன்றாம் நபர் வடிவமைத்த செயலி ஆகும். இதன் உத்யோகப் பூர்வமான தளத்தின் மூலமே டவுன்லோட் செய்ய முடியும்.
ஒளிதம் ஸ்மார்ட் போன் செயலியை பயன்படுத்துவது எப்படி?
- கீழே கொடுக்கப்பட்டுள்ள சுட்டியின் வழியாகச் சென்று, உங்களுடைய ஸ்மார்ட்போனில் செயலியை இன்ஸ்டால் செய்துகொள்ளுங்கள்.
- இன்ஸ்டால் செய்வதற்கு முன்பு, உங்களுடைய போனில் “Settings” பகுதயில் சிறிய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.
- Settings = > Security => Unknown Source என்பதில் (டிக்) மார்க் ஏற்படுத்தி கொள்ள வேண்டும்.
- அப்ளிகேஷனை நிறுவிய பிறகு, அதைத் திறந்து, மொழியைத் தேர்ந்தெடுத்து தேவையான தொலைக்காட்சி அலைவரிசை பார்க்க முடியும்.
- தமிழ் வானொலி அலைவரிசைகளும் இதில் உண்டு. கேட்டு மகிழலாம்.
google_ad_client = “ca-pub-2152010975483882”; google_ad_slot = “2962536853”; google_ad_width = 300; google_ad_height = 600; google_language = “en”; //pagead2.googlesyndication.com/pagead/show_ads.js
மேலும் கூடுதல் வசதிகளுடன் கூடிய “ஒளிதம்” செயலியைப் பெற செல்ல வேண்டிய உத்யோகப் பூர்வமான இணையதளத்திற்கான சுட்டி கீழே கொடுக்கப்பட்டுள்ளது. .