சில நேரங்களில் தேவையில்லாத போன் அழைப்புகளை தவிர்க்க வேண்டி வரும். ஏற்கனவே அந்த அழைப்புக்குரிய எண்ணை பதிவு செய்து வைத்திருந்தால், அந்த அழைப்பை ஏற்காமல் தவிர்க்கலாம். புதிய எண்ணிலிருந்து தொந்தரவு தரும் அழைப்புகளை தவிர்க்க வேண்டுமானால், அது தெரிந்தவர்கள் அழைப்பா, அல்லது தவிர்க்க வேண்டிய அழைப்பா என தெரியாது. அதற்காகவே உருவாக்கபட்டதுதான் “True Caller” செயலி.
![]() |
அழைப்பவர் யார் என அறிந்துகொள்ள உதவும் செயலி |
உங்களுக்கு வரும் புதிய அழைப்பிற்குரிய எண்ணை இதன் இணையதளத்தில் கொடுத்து, அந்த எண்ணுக்குரியவர் பற்றிய விபரங்களை பெறலாம். அதற்கு முதலில் உங்களுடைய கூகிள் ஐடி அல்லது மைக்ரோசாப்ட் ஐடி கொடுக்க வேண்டியதிருக்கும்.
இந்த ட்ரூகாலர் வசதியில் இதுவரை 200 கோடிக்கும் அதிகமான எண்கள் பதியப்பட்டுள்ளன. உங்களுக்கு அழைப்புகளுக்குரிய புதிய எண்களை இந்த தளத்தில் உள்ளிட்டு, அந்த எண் குறித்த தகவல்களை பெறலாம்.
ட்ரூகாலர் செயலியை பயன்படுத்துவது எப்படி?
ட்ரூகாலர் செயலியை பயன்படுத்துவது சுலபம். கீழிருக்கும் இணைப்பின் வழியாக உங்களுடைய ஸ்மார்ட் போனில் இச்செயலியை நிறுவிக்கொள்ளலாம்.
google_ad_client = “ca-pub-2152010975483882”; google_ad_slot = “2962536853”; google_ad_width = 300; google_ad_height = 600; google_language =”en”; //pagead2.googlesyndication.com/pagead/show_ads.js
ட்ரூகாலர் செயலின் பயன்கள் மற்றும் சிறப்பு வசதிகள்
1. தேவையில்லாத புதிய எண்ணிலிருந்து வரும் (Spam) அழைப்புகளை தடுக்கலாம்.
2. புதிய எண்ணிலிருந்து வரும் அழைப்பை கவனித்துவிட்டு, அதை நிறுத்தவும். அழைப்பை நிறுத்திய பிறகு, உங்களுக்கு ஒரு ஆப்சன் கிடைக்கும். அதில் அந்த ஆப்சனில் குறிப்பிட்ட எண்ணை தடுக்க செட்டிங்ஸ் அமைத்து கொள்ளலாம்.
3. இன்டர்நெட் கனெக்சன் எப்போதும் உங்கள் ஸ்மார்ட்போனில் இருக்க வேண்டியதில்லை. ஏற்கனவே அந்த எண்ணைப் பற்றிய தகவல் இருக்குமாயின், அதை ட்ரூகாலர் நினைவில் வைத்துக்கொள்கிறது. அடுத்த முறை அந்த எண்ணிலிருந்து அழைப்பு வருகையில் அதைப் பற்றிய தகவல்களை உங்களுக்கு காட்டும்.
4. உங்களுக்கு அடிக்கடி தொல்லை கொடுக்கும் அழைப்பு எண்களை நீங்கள் Spammer என குறிப்பிட்டு வைக்கலாம். இதுபோல ஒரு எண்ணை பலர் ஸ்பேம் என குறிப்பிட்டு வைத்திருந்தால், எத்தனை சதிவிகிதம் பேர் இதை ஸ்பேம் செய்திருக்கிறார்கள் என்ற தகவலும் அதிலும் காட்டும்.
5. ஒரு எண்ணிலிருந்து வரும் அழைப்பு வந்தால் மட்டுமே அது குறித்த விபரங்களை ட்ரூகாலர் காட்டும் என்ற வரையறை இல்லை. எந்த ஒரு எண்ணையும் ட்ரூகாலரில் கொடுத்து, அந்த எண்ணுக்குரிய விபரங்களை பெற முடியும்.
6. ஒரு எண்ணைப் பற்றிய விபரம் ட்ரூகாலர் கொடுத்து அறிந்த வுடன், அந்த எண்ணுக்குரியவருக்கும் அத்தகவல் செல்லும். அதாவது குறிப்பிட்ட எண்ணிலிருந்து, உங்கள் எண் குறித்த தகவல்,அறியப்பட்டது என தகவல் சென்றுவிடும்.
7. உங்களைப் பற்றிய தகவல் தொகுப்பை ட்ரூகாலரில் பதிந்து வைத்துக்கொள்ளலாம். இதனால் உங்கள் எண்ணுக்கு அழைப்பவருக்கு உங்களைப் பற்றிய கூடுதல் தகவல்களை அளிக்க முடியும்.
8. பிரைவசி வசதி மூலம் உங்களைப் பற்றிய தகவல்களை பிறர் பார்க்காமல் இருக்கவும் செய்யலாம்.
9. ட்ரூ காலரில் உங்களைப் பற்றிய தகவல்களை யாருக்கும் காட்ட கூடாது என நீங்க நினைத்தால், ட்ரூ காலர் இணையதளத்தில் சென்று அதனுடைய தகவல் தொகுப்பிலிருந்து உங்களைப் பற்றிய தகவல்களை நீக்கிவிடலாம்.
அதற்கு . http://www.truecaller.com/unlist என்ற சுட்டியில் சென்று, இந்தியாவிற்குரிய குறியீட்டு எண்ணுடன் உங்களுடைய மொபைல் நம்பரை கொடுக்க வேண்டும்.
தகவல் தொகுப்பிலிருந்து எண்ணை ஏன் நீக்குகிறீர்கள் என்ற காரணத்தையும் அதில் கொடுக்கப்படும் ஆப்சன்களில் ஒன்றை தேர்ந்தெடுத்து கொடுக்க வேண்டும். பிறகு, அதில் காட்டப்படும் கேப்சா சோதனையை முடித்த பிறகு உங்களுடைய எண் ட்ரூகாலர் தகவல் தொகுப்பிலிருந்து நீக்கப்படும். அதன் பிறகு உங்கள் எண் பற்றிய தகவல்கள் வேறு யாருக்கும் காட்டப்படாது.
ஆன்ட்ராய்ட் போனுக்கு மட்டுமல்ல… iPhone, Windows phone, Blackberry 10 ஆகிய போன்களுக்கும் இந்த செயலியை பயன்படுத்த முடியும்.
ட்ரூகாலர் செயலியை டவுன்லோட் செய்ய சுட்டி:
Download Free True Caller apps for Android
புதுப் பயனர்கள் அனைவரும் யார் என்பது குறித்து தெரியவே
அழைப்பவர் யார் என்று தெரியவில்லை என்றால் அது யார் என்பதை நான் அறிய வேண்டும்
ட்ரூ காலர் ஆப் ஓரளவிற்கு உதவும். மிகச்சரியாக கண்டுபிடிப்பது சிரம ம்.